700 கோடி டாலர் மதிப்பில் புதிய தொழிற்சாலை: இன்டெல் அறிவிப்பு

  gobinath   | Last Modified : 09 Feb, 2017 09:47 am
அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரைன் க்ரானிஷ், 700 கோடி டாலர் மதிப்பில், புதிய தொழிற்சாலை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இதன் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்டெல் நிறுவனம் சார்பாக முன்னர் அறிவிக்கப்பட்ட பாப் 42, அடுத்து வரும் 4 அல்லது 5 ஆண்டுகளில் நிறைவடைந்து, செயல்பட தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இன்டெல் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் பெரும்பாலும் அமெரிக்காக்காவிலேயே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த பிரைன், இன்டெல் நிறுவனம் தயாரிக்கவுள்ள 7 நானோமீட்டர் சிப்ஸ், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டர் சிப்ஸ் - ஆக இருக்கும் என தெரிவித்தார். தனிப்பட்ட திறமைகளை உள்ளடக்கிய மாபெரும் திறமை அமெரிக்காவில் இருப்பதாக தெரிவித்த அவர், இன்டெல் போன்ற அதி வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புக்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கு, துடிப்பான அமெரிக்காவின் வணிக சூழல் பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், இன்டெல் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை தொடர்பான அறிவிப்புக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் , இன்டெல் நிறுவனத்தின் அறிவிப்பால், புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் பெருகும் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, டிரம்பின், 7 இஸ்லாமிய நாடுகளின் மீதான பயண தடைக்கு எதிராக மனு அளித்திருந்த 100 நிறுவனங்களில் இன்டெல் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close