லட்சக்கணக்கான ஆப்களை நீக்குகிறது கூகுள்

Last Modified : 10 Feb, 2017 02:58 pm
முறையான தனியுரிமை கொள்கை(Privacy Policy) இல்லாத லட்சக்கணக்கான செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம், பல்வேறு செயலிகள் பயனாளர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்குகள் போன்ற சில முக்கிய தகவல்களை பெறுகின்றன. ஆனால் இவற்றை முறையாக பாதுகாக்கும் தனியுரிமை கொள்கைகளை இந்த செயலிகள் கொண்டிருக்க வில்லை. இதனால் எளிதில் பயனாளர்கள் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட செயலிகளை உருவாகியவர்களுக்கு தனியுரிமை கொள்கையை மேம்படுத்துமாறு மெயில் மூலம் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் மார்ச் 15-ம் தேதிக்குள் இவற்றை செய்து முடிக்காவிட்டால் அந்த செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி விடுவோம், என தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close