இனி மொபைல் போனிலும் காளையை அடக்கலாம் - ஜல்லிக்கட்டு ரன்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. அதற்கு தடை விதித்ததால், அதனை மாணவர்களும், போராட்டக்காரர்களும் தமிழகமெங்கும் மாபெரும் போராட்டத்தை நடத்தி மீட்டெடுத்தனர். இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் இருந்த போது ஒரு நீதிபதி "வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டை வீடியோ கேமில் விளையாடிக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது, புதிய ஆப் ஒன்று ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ப்ளே ஸ்டோர்களில் ஜல்லிகட்டு ரன் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறது. இந்த ஆப், ஜல்லிக்கட்டை அதன் கலாச்சார விஷயங்களோடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக உள்ளது. 16 மெகாபைட் அளவில் உள்ள இந்த ஆப் இன்ஸ்டால் செய்தவுடன் கிராமிய வாத்தியங்களின் இசையுடன் துவங்குகிறது. விளையாட்டை துவங்கினால் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளை, மாடுபிடி வீரர்களை தாண்டு ஓடும், 3 லைஃப்கள் ஆட்டம் துவங்கியதும் இருக்கும், நடுவே காளைக்கு ஆட்டத்தில் காயின்களும், இடையிடையே வாய்ப்புகளும் கிடைக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close