லுஃப்தான்ஸா விமான நிறுவனத்தின் சொகுசு ரக புதிய விமானம் AIRBUS A350

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகில் உள்ள சொகுசு விமானங்களில் ஒன்றான AIRBUS விமான சேவையை, இந்தியாவில் முதன்முதலாக லுஃப்தான்ஸா அறிமுகப் படுத்தி உள்ளது. மூனிச் - டெல்லி வரை தொடங்கி உள்ள இந்த விமான சேவையில் எண்ணற்ற நவீன வசதிகள் செய்யப் பட்டுள்ளன. 293 பயணிகள் செல்லும் வசதி உள்ள இதில் 224 எக்கனாமி கிளாஸ், 48 பிசினஸ், 21 ப்ரீமியம் இருக்கைகள் உள்ளன. இந்த விமானத்தின் மேல்பகுதிகள் நவீன கார்பன் ஃபைபர் பாகங்களின் கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உறுதியானதாகவும், அதேநேரத்தில் இலகுவானதாகவும் இருப்பதால் அதிக எரிபொருள் சிக்கனத்தை இந்த விமானம் தரும். இந்த airbus விமானம் 219 அடி நீளமும், 212.4 அடி அகலமும் உடையது. 55.9 அடி உயரத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 280 டன் எடையுடன் பறக்ககூடியது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.