'லிஸ்ட்' - கூகுள் மேப்பின் புதிய அம்சம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

கூகுள் நிறுவனம் லிஸ்ட் எனும் புதிய அம்சத்தை கூகுள் மேப்பில் அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் விரும்பும் இடங்களை நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த அம்சமானது ஆப்லைனிலும் வேலை செய்யும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. கூகுள் பயனாளர்கள் இதனை இரு வகையில் பயன்படுத்தலாம். முதலில் கூகுள் மேப்பில் சைடு மெனுவை க்ளிக் செய்து பின்னர் யுவர் ப்ளேஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உள்ள Saved எனும் தேர்வை கிளிக் செய்து விருப்பமான இடத்தை குறிப்பிட்டு அதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது முறையில் நேரடியாக விருப்பமான இடத்தை தேர்வு செய்து விட்டு சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து பகிரியேட் நியூ லிஸ்ட் கொடுத்து அதில் சேமித்து கொள்ளலாம். இவ்வாறாக சேமிக்கப் பட்ட இடங்களை வாட்ஸ்ஆப், ஹேங் அவுட், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close