பயன்பாட்டிற்கு வந்தது "பேஸ்புக் ஜாப்ஸ்"

Last Modified : 16 Feb, 2017 01:17 pm
பேஸ்புக் மூலம் வேலை தேடும் புதிய வசதியை மேம்படுத்தி வருவதாக பேஸ்புக் முன்னர் கூறி இருந்தது. தற்போது இந்த வசதியினை அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக 'ஜாப்ஸ்' எனும் புதிய புக்மார்க்கை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நேரடியாக பேஸ்புக்கில் இருந்த படியே வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள வேலைக்கான அறிவிப்புகளின் கீழ் 'அப்ளை நவ்' எனும் ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்த உடன் பேஸ்புக்கில் நீங்கள் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் வேலைக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை 'எடிட்' ஆப்ஷன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இச்சேவையானது விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப் பட உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம், "ஏற்கனவே பயனாளர்கள் பேஸ்புக் மூலம் வேலை தேடவும், வேலை குறித்த அறிவிப்புகளை வெளியிடவும் செய்கின்றனர். தற்போது பேஸ்புக் மூலமாக நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கவே இந்த புதிய வசதியை அறிமுகப் படுத்தி உள்ளோம்," என தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close