இணையம் இல்லாமலே வானிலை அறிக்கை

  mayuran   | Last Modified : 17 Feb, 2017 04:38 pm
அன்றாடம் நாம் வானியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறியும் 'The Weather Channel' என்ற மொபைல் ஆப் IBM (International Business Machines) நிறுவனத்தின் ஆய்வாளர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் டவுன்லோட் செய்துள்ளனர். அதோடு இந்த ஆப்பினை பல மொபைல் நிறுவனங்கள், போன்களில் இன்ஸ்டால் செய்தே விற்பனைக்கு வழங்குகிறது. முழுவதுமாக இணையத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்த ஆப்பானது தற்போது இணையம் இல்லாமலே வானிலை சார்ந்த விஷயங்களை 'peer to peer' என்ற முறையில் இயங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் மொபைல்களில் இருந்து அருகில் இருக்கும் மொபைலுக்கு எந்த இணைய வசதியும் இன்றி மெசேஜ்களை அனுப்புவதே 'peer to peer' தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பமே இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக ஆப் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close