Iphone SEயுடன் துவங்குகிறது பெங்களூர் தொழிற்சாலை

  mayuran   | Last Modified : 17 Feb, 2017 06:15 pm

மொபைல் பிரியர்களின் கனவு போனாக திகழும் Iphone குறைந்த செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது. ஆப்பிளின் தைவான் நிறுவனம் Wistron Corp, இதற்கான தொழிற்சாலையினை பெங்களூரில் நிறுவியுள்ளது. இங்கு தலைமையிடத்தில் இருந்து வரும் Iphone பாகங்களை, இந்திய தொழில்நுட்பத்துடன் பொருத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 4 லட்சம் iPhone SE மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனால் இந்தியாவில் Iphone வாடிக்கையாளர்களை அதிகரிக்க செய்ய முடியும் என கூறப்படுகிறது. கடந்த வருடம் 25 லட்சம் Iphone கள் விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close