கடந்த வருடம் ஐஒஸ் இயங்குதளத்தில் அறிமுகமான 'EasilyDo's Email' ஆப், தற்போது ஆண்ட்ராய்டில் அறிமுகமாகியுள்ளது. ஐஒஸ் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து நேற்று இந்த ஆப் ஆண்ட்ராய்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதில் Gmail, Hotmail, iCloud, Yahoo, Outlook, Office/Outlook 365, மற்றும் AOL ஈமெயில் சேவைகளையும், உங்கள் நிறுவன ஈமெயில்களையும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று உள்ள வேறு சில ஆப்களை விட, இதில் ஈமெயிலில் வரும் மெசேஜ் லோட் ஆகும் வேகம் அதிகம் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
அதோடு நம் ஈமெயிலில் பெறப்படும் மெசேஜ்களை கொண்டு, அன்றாடம் நாம் செலவு செய்த விபரங்களை நாள் முடிவில் மொத்தமாக தெரிவிப்பதோடு, பயணத்திற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தால் அந்த பயணத்தை நினைவு படுத்தும் அலெர்ட்களையும் வழங்குகிறது.