சாம்சங் எஸ் 8 மாடல் நிறம், விலை கசிந்தது

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த வருடத்தில் சாம்சங் நோட் 7 போன் பேட்டரி பிரச்சனையால் வெடித்தது. இதனால் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்ததுடன் பல கோடி நஷ்டத்தையும் சந்தித்தது. இதையடுத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் சாம்சங் எஸ் 8 மற்றும் சாம்சங் எஸ் 8 பிளஸ் மாடல் போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த போனின் விலை மற்றும் நிறம் என்பவை தற்போது கசிந்துள்ளது. கருப்பு, தங்கநிறம், ஓர்கிட் கிரே போன்ற நிறங்களில் வெளிவர இருப்பதாக தெரிகிறது. சாம்சங் எஸ் 8 போனின் விலை ரூ. 63,800 ஆகவும் சாம்சங் எஸ் 8 பிளஸ் விலை ரூ.70,500 ஆகவும் ஏப்ரல் மாதத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சாம்சங் எஸ் 8 மற்றும் சாம்சங் எஸ் 8 பிளஸ் முறையே 3000mAh, 3500mAh பேட்டரியும், 5.8 இன்ச், 6.2 இன்ச் டிஸ்ப்ளேயினையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close