புதிய தொழில்நுட்பத்தால் 65% ஐடி ஊழியர்களுக்கு வேலை பறிபோகும்?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாஸ்காம் லீடர்ஷிப் மாநாட்டில் கேப் ஜெமினி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கண்டுலா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவை பொறுத்த வரை, பெரும்பாலான ஐடி ஊழியர்கள், சுமாரான கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதால், ஐடி துறையில் மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வேலை செய்ய அவர்களால் முடிவதில்லை என தெரிவித்தார். பெரும்பாலான கல்லூரிகளில், கடினமான பயிற்சிகள் கொடுக்கப்படாதன் விளைவுதான் இது என கூறிய அவர், ஐடி துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்திற்கு இணையாக தங்களை உயர்த்திக் கொள்ள பெரும்பாலான இந்திய ஊழியர்களால் முடியவில்லை எனவும், இதன் காரணமாக மத்திய அல்லது மூத்த பிரிவு அதிகாரிகளுக்கு வேலையிழப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் உள்ள மொத்த ஐடி பணியாளர்களில் சுமார் 65 சதவீத பேர் இதன் மூலம் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது பணிக்கு வரும் மாணவர்கள் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூட கூறமுடி யாமல் இருக்கின்றனர். அந்த செமஸ்டரில் படித்த விஷயங்களை கூட அவர்களால் சொல்ல முடிய வில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார். இதனிடையே, பிரான்ஸை சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனத்தின் இந்திய பிரிவில் ஒரு லட்சத்துக்கு மேலான பணியாளர்கள் வேலை பார்ப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close