டாட்டா உடன் இணையும் ரிலையன்ஸ், ஏர்செல் மற்றும் எம்டிஎஸ்?!!!

Last Modified : 20 Feb, 2017 12:03 pm

ஜியோவின் வருகையால் தொலைத்தொடர்பு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. தனித்தனியாக ஜியோ உடன் போட்டிப் போட்ட நிறுவனங்கள் தற்போது கூட்டு சேர்ந்து போட்டியிட தயாராகி உள்ளன. ஏற்கனவே ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், தற்போது டாட்டா நிறுவனம், ரிலையன்ஸ், ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் நிறுவனங்களுடன் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உறுதிப் படுத்தப்படாத இந்த தகவலை டாட்டா நிறுவன தகவல் வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. இதில் ஏற்கனவே ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்த கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டாட்டா மற்றும் டொக்கோமோ நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் பணப் பிரச்சனை காரணமாக, கூட்டணி பேச்சு வார்த்தையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, இவ்விவகாரத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டணி குறித்து சம்பந்தட்ட நிறுவனங்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை கிடைக்க வில்லை. இந்த தகவல் வெளியானதை அடுத்து இந்நிறுவனங்களின் பங்குகள் 10% உயர்ந்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close