இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ள டாடா குழுமத்தின், புதிய தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி அனைத்து பதவிகளிலும் இருந்தும் நீக்கப்பட்டார்.
நாளை அதிகாரபூர்வ தலைவராக பொறுப்பேற்கவுள்ள என்.சந்திரசேகரன், தமிழ்நாட்டின் நாமக்கல்லில் பிறந்தவர். TCS நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இங்கிலாந்திலுள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தை செயல்படுத்தியதிலும், பெரும் பங்கு இவருக்கு உண்டு.
தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நிறுவனத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்றும், முந்தைய நிலைமையை சீராக்கி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவேன், என்றும் அவர் தெரிவித்தார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.