பேஸ்புக் மூலம் இனி பணம் அனுப்பலாம்

  mayuran   | Last Modified : 21 Feb, 2017 05:37 pm
சமூக வலைத்தளங்கள் அரட்டைக்கு மட்டுமின்றி வணிக துறைக்கும் பல வகைகளில் கைகொடுக்கிறது. அந்த வகையில் பேஸ்புக், அண்மையில் அறிமுகம் செய்த 'Messenger Bot' சேவையானது, வணிகத்திற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனமான 'TransferWise', மெசெஞ்சர் ஊடாக பணத்தினை மற்றவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மூலம், அமெரிக்காவிற்குள் பணம் அனுப்புவதற்கு பேஸ்புக் அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப முடியும். இதேபோல் இந்தியாவில் HDFC வங்கி, பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் மொபைல், DTH போன்றவற்றை ரீசார்ஜ் செய்யவும் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close