நோ இலவசம்; ஆனா 303 ரூபாய்க்கு 30 ஜிபி; ஜியோ அதிரடி

  gobinath   | Last Modified : 21 Feb, 2017 08:11 pm
ரிலையன்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ 4ஜி இலவச சேவையை கடந்த 170 நாட்களில் 10 கோடி பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தின் படி, ஒவ்வொரு நொடிக்கும் 7 வாடிக்கையாளர்கள் என ஜியோ சேவையில் இணைந்து கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக , கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல் சேவையை தொடங்கிய ஜியோ மூலம், வரும் மார்ச் மாத கடைசி வரை இலவச அழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மாதம் ஒன்றிற்கு 100 கோடி ஜிபி டேட்டா, ஜியோ வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த முகேஷ் அம்பானி, அது நாள் ஒன்றிற்கு 3.3 கோடி ஜிபி டேட்டாவாக இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன், மார்ச் 31 ஆம் தேதிக்கு பின்னர், ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் என்ற வசதியை வருடத்திற்கு ரூ 99க்கு ரீசார்ஜ் செய்து பெற்றுக் கொள்ளலாம். , அதேபோல் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் 30 ஜிபி டேட்டாவை பெறுவதற்கு மாதம் ஒன்றிற்கு ரூ 303க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close