4ஜிபி RAM கொண்ட HTC U Ultra மற்றும் HTC U Play

Last Modified : 22 Feb, 2017 02:14 pm
HTC U Ultra மற்றும் U Play எனும் இரு புதிய மொபைல்களை HTC நிறுவனம் இந்தியாவில் அறிமுகப் படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக இயங்கும் இந்த மொபைல்கள் ஹைபிரிட் டூயல் நேனோ சிம் கொண்டவை. இந்த இரண்டு மொபைல்களும் மார்ச் மாதம் விற்பனைக்கு வருகின்றன. HTC U Ultra 5.7 இன்ச் தொடுதிரை, 4ஜிபி RAM, குவாட் - கோர் ப்ராஸெஸார் 12 அல்ட்ரா பிக்சல் பின்பக்க கேமரா, 16 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2TB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 4ஜி VOLTE, பிங்கர் பிரிண்ட் சென்சார், Quick Charge 3.0 உடன் கூடிய 3000 mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளன. இதன் விலை 59,990 ரூபாயாகும். HTC U Play 4ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.2 இன்ச் தொடுதிரை, ஆக்டா - கோர் ப்ராஸெஸார், 4ஜி VOLTE, பிங்கர் பிரிண்ட் சென்சார், 16 மெகா பிக்சல் திறன் கொண்ட முன் பக்க மற்றும் பின் பக்க கேமரா, 2 TB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 2500 mAh பேட்டரி போன்றவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 39,990 ஆகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close