இனி வேலை தேட 'Project Sangam' போதும்

  mayuran   | Last Modified : 22 Feb, 2017 09:30 pm
இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்யா நாதெள்ளா, 'புரொஜெக்ட் சங்கம்' என்னும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இந்த ஆப்பில் ஆதார் எண்ணை பதிவு செய்து, வேலைவாய்ப்புக்களை தங்களின் தகுதிக்கு ஏற்றார்போல் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தேடும் இணையத்தளமான 'Linkedin' உடன் இணைந்து இது வேலைகளைப் பெற்றுத்தருகிறது. ஆப்பின் சேவையினை ஆந்திராவில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூறிய சத்யா நாதெள்ளா, "இதில் வேலை தேடுபவர்கள் மட்டும் அல்லாது, பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களும் இருக்கும். அவர்களிடம் வேலைக்கான பயிற்சிகளைப் பெற்று வேலையினை தேட சிறந்த வழியாகவும் இது அமையும்" எனத் தெரிவித்தார். மேலும் 2G மற்றும் 3G அலைவரிசையிலும் சிறப்பாக இயங்கும் 'SKYPE LITE' ஆப்பையும் அறிமுகம் செய்தார். இதில் தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close