ஜியோவை சமாளிக்க டெலினாரை வாங்கும் ஏர்டெல்

Last Modified : 23 Feb, 2017 12:27 pm

நார்வே நாட்டை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினார், இந்தியாவில் ஆந்திரா, குஜராத் மற்றும் அசாம் உட்பட 7 தொலைத்தொடர்பு வட்டங்களில் தனது சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் இந்திய சேவையை பாரதி ஏர்டெல் நிறுவனம் வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் நினைத்த அளவிற்கு டெலினார் நிறுவனத்தால் வர்த்தகத்தை மேம்படுத்த முடியாததால் இம்முடிவு எடுக்கப் பட்டதாக தெரிய வந்துள்ளது. டெலினாரை வாங்குவதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டின் கீழ் கூடுதலாக 43.4 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இணைக்கப் படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் ஏர்டெல் தனது 4ஜி சேவையை மேம்படுத்தி ஜியோவுக்கு கடும் போட்டியை கொடுக்கும், என பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் ஆசிய தலைவர் நிதின் சோனி தெரிவித்தார். டெலினார் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close