ஸ்நாப்டீல் நிறுவனத்தில் 600 பேர் வேலை நீக்கம்!

  shriram   | Last Modified : 23 Feb, 2017 02:19 pm
பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் உள்ளிட்ட இணையதள ஷாப்பிங் நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், ஸ்நாப்டீல் நிறுவனத்தின் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் இருவரும், தங்களது முழு சம்பளத்தையும் துறப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களோடு பல மூத்த அதிகாரிகளும் சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. "எங்கள் நிறுவனத்தின் சக்தி முழுவதையும், லாபத்தை நோக்கி முன்னேறுவதற்காக பயன்படுத்த வேண்டிய நேரம் இது. இதனால் நானும், துணை நிறுவனர் ரோஹித்தும் முழு சம்பளத்தையும் விட்டுக்கொடுக்கிறோம்," என ஸ்நாப்டீல் தலைவர் குனல் பாஹ்ல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கடந்த 15 மாதங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும், அசுர வளர்ச்சி அடைந்து வரும் அமேசானிடம் வாடிக்கையாளர்களை இழந்ததுமே இந்த முடிவுக்கு காரணமாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close