இன்று புதிய கேடிஎம் டியூக் விற்பனைக்கு வந்துள்ளது....

Last Modified : 23 Feb, 2017 06:16 pm
கேடிஎம் டியூக் 390 : # மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் டியூக் 390 பைக் ரூபாய் 2.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. # இதில் ரைட் பை வயர் , சிலிப்பர் கிளட்ச் போன்ற வசதிகள் உள்ளன. # மேலும், இது 1290 சூப்பர் டியூக் R பைக்கின் தோற்ற உந்துதலில் இருந்து உருவாக்கப்பட்ட மிகவும் ஆக்ரோஷமாக விளங்கும் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. # 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட இந்த வண்டியில் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இரு வண்ண கலவையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் 200 : # புதிய 2017 கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1.43 லட்சம் விலையில் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. # இதில் பல்வேறு தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. # இது கேடிஎம் 390 ட்யூக் பைக் போன்று பெரிய அளவிலான வசதிகளை பெறாமலே வந்துள்ள புதிய கேடிஎம் டியூக் 200 பைக்கில் ஹாலஜென் முகப்பு விளக்குடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. கேடிஎம் டியூக் 250 : # இந்தியாவில் ரூ.1.73 லட்சம் விலையில் புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. # 390 மற்றும் 200 டியூக் பைக்குகளுக்கு இடையில் புதிய டியூக் 250 பைக் நிலை நிறுத்தப்பட்டு மிகவும் சவலான விலையிலும் அமைந்துள்ளது. # இரு பைக் மாடல்களுக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய ட்யூக் 250 பைக்கில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது. # இந்த மாடலில் 250சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. # முன்பக்க டயரில் 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close