பறக்கும் பைக்; சோதனை வெற்றி - VIDEO

  mayuran   | Last Modified : 24 Feb, 2017 10:43 am
ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ட்ரோன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, ஹோவர் எனப்படும் பறக்கும் பைக் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் என்ற நிறுவனம் ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பைக்கை உருவாக்கி உள்ளது. ஸ்கார்ப்பியன்-3 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஹோவர் பைக், ஒருவர் மட்டுமே அமர்ந்து ஓட்டிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த பைக், தரையிலிருந்து 33 அடி உயரம் வரை பறக்கும் வகையிலும், மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close