சோனி அறிமுகப் படுத்துகிறது உலகின் அதிவேக மெமரி கார்ட்

Last Modified : 24 Feb, 2017 12:11 pm
முன்னணி மின்சாதன உற்பத்தி நிறுவனமான சோனி புதிதாக SF-G வரிசையில் UHSII SDXC எனும் மெமரி கார்டை அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த மெமரி கார்டானது உலகிலேயே அதிவேகமானது என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகிய அளவுகளில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்த மெமரி கார்டின் Read மற்றும் Write Speed முறையே 300MB/s மற்றும் 299MB/s ஆகும். இதன் விலை குறித்த தகவல் வெளியிடப் படவில்லை. மேலும் சோனியின் File Rescue சாப்ட்வேர் மூலமாக டெலீட் செய்யப் பட்ட மற்றும் டேமேஜான புகைப்படங்களை கூட இதில் இருந்து திரும்ப பெற முடியும். புகைப்பட துறையில் இருப்பவர்களுக்கு இந்த மெமரி கார்ட் வரப்பிரசாதமாக அமையும், என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close