க்ரோமை தாக்கும் புதிய மால்வேர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களில் க்ரோம் பிரௌசரை தாக்க கூடிய புதிய மால்வேர் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நியோ ஸ்மார்ட் டெக்னாலஜிஸ் எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம் இந்த மால்வேரை கண்டுபிடித்துள்ளது. ஜாவா ஸ்கிரிப்ட் மூலமாக க்ரோமில் உள்ள எழுத்துக்களை மாற்றும் இந்த மால்வேர், க்ரோம் பயனாளர்களிடம் இந்த பிரச்சனையை சரி செய்ய "Chrome language pack" எனும் புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யுமாறு தகவல் அனுப்பும். அதை நம்பி அந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பொழுது ஹேக்கர்கள் எளிதில் நம் கணினியில் நுழைந்து தகவல்களை திருடி சென்று விடுவர். விண்டோஸ் டிபெண்டர் மற்றும் க்ரோம் சாப்ட்வேர் ஆகியவற்றாலும் கூட இந்த மால்வேரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது வரை பயன்படுத்தப் பட்ட 59 ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர்களில் 9 சாப்ட்வேர்களால் மட்டுமே இவற்றை கண்டு பிடிக்க முடிந்துள்ளது. எனவே விண்டோஸ் மற்றும் மேக் பயனாளர்கள் புதிய சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்யும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close