இந்தியாவில் மட்டும் 20 கோடி வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஸ்மார்ட் போன் என்றாலே வாட்ஸ்அப் என்ற நிலையில் இருக்கும் இந்தியாவில், 20 கோடி வாடிக்கையாளர்களை எட்டியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரைன் அக்ஷன், தங்கள் நிறுவனம் மேலும் பல எளிமையான வசதிகளை வழங்க இருப்பதாக தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா என்ற மத்திய அரசின் திட்டத்தில் தாங்களும் பங்களிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். முன்னதாக மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை பிரைன் அக்ஷன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close