மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு 9.5% ஊதிய உயர்வு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரபல மனிதவள நிறுவனமான ஏயான் ஹெவிட், சம்பள உயர்வு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் நடப்பாண்டில் மாத ஊதியம் பெறுவோர் 9.5% வரை ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அந்த அளவு 10.2% ஆக இருந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு, 15.1ஆக இருந்த சம்பள உயர்வு படிப்படியாக குறைந்து 9.5% என்ற அளவை அடைந்துள்ளது. சம்பள உயர்வின் விகிதம் குறைந்ததற்கு, உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகளால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூபாய் நோட்டு விவகாரம், டிரம்பின் புதிய அரசு ஆகியவையும் காரணம் என்று கூறப்படுகிறது. குறைந்த மற்றும் அதிக செயல்திறன் உடைய ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய உயர்வு 1.8 மடங்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close