ரோமிங் கட்டணத்தை ரத்து செய்தது ஏர்டெல்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மகா என்ட்ரியை தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு விலையை குறைத்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொள்ள போராடிய வருகின்றன. பல டேட்டா ஆஃபர்களை கொடுத்த ஏர்டெல் தற்போது அதிரடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. டேட்டா மற்றும் கால்களுக்கு இனி ரோமிங் கிடையாதாம். "ஏப்ரல் 1 முதல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் முற்றிலும் இலவசம். கால்கள் செய்யவும் எந்த அதிக ரோமிங் கட்டணமும் கிடையாது," என ஏர்டெல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close