அதுக்குள்ள 4.5G?? புதிய ஹுவெய் போன்!

  shriram   | Last Modified : 27 Feb, 2017 08:35 pm
என்னடா புதுசா வாங்குன 4G போனையே இன்னும் முழுசா என்ஜாய் பண்ண முடியல, அதுக்குள்ள 4.5G யா?? ஆமா...ஹுவெய் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள P10 மாடல் மொபைல் போன்ல 4Gயை விட வேகமான 4.5G திறன் இருக்காம்! உலகிலேயே முதல் 4.5G ஸ்மார்ட்போன் இதுதான். இன்று P10 மற்றும் P10 Plus என இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இதில் ஏதோ விசேஷ தொழில்நுட்பம் மூலமாக அதிநவீன ஆன்டெனா இருக்குதாம். அதனால, சிக்னல் இல்லாம கால்கள் தானாக 'கட்' ஆகுறதெல்லாம் 60% குறையுதாம். அப்படின்னு அந்த கம்பெனி ஓனர் தான் சொல்றாரு. அதுமட்டுமில்லாம சிக்னல் கம்மியா இருக்குற இடத்துல கூட டவுன்லோட் வேகம் இரண்டு மடங்கு அதிகமா இருக்குதாம். இரண்டு போன்லையும் 5.5 இன்ச் ஸ்க்ரீன் உண்டு. முக்கியமா பிரபல 'லைக்கா' கேமரா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூப்பர் கேமரா வடிவமைத்துள்ளார்கள். பின்பக்கம் 20 + 12 மெகாபிக்சல் திறன் கொண்ட டுயல் கேமராவும், முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமராவும் நம்மை ஈர்க்கின்றன. P10இல் 4 ஜிபி RAM சக்தியும், P10 Plusஇல் 6 ஜிபி ரேம் சக்தியும் உள்ளது. ரெண்டு போனோட ரேட்டும் கண்டிப்பா 40 ஆயிரங்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close