ONGC - எச்.பி இணையும் 44,000 கோடி ரூபாய் மெகா டீல்!!

  shriram   | Last Modified : 27 Feb, 2017 09:07 pm

இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி, 3வது மிகப்பெரிய நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) நிறுவனத்தை 44,000 கோடி ரூபாய் கொடுத்து இணைத்துக்கொள்ளும் மெகா ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு, அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி, எச்.பி.யில் அரசு வைத்திருக்கும் 51% பங்குகள் மற்றும் மற்றவர்களிடம் உள்ள 26% பங்குகளையும் வாங்கவேண்டும். நிதியமைச்சர் அருண் ஜெட்லீ இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை இணைத்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு இணையாக புதிய நிறுவனத்தை உருவாக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தியாவில் உள்ள 6 பெரிய எண்ணெய் நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தியிலும், எச்.பி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் கெயில் ஆகியவை எண்ணெய் சுத்தீகரிப்பிலும் ஈடுபட்டுள்ளன. தற்போது ஒரு எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துடன், ஒரு எண்ணெய் சுத்தீகரிக்கும் நிறுவனத்தை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்படி, ஓ.என்.ஜி.சி - எச்.பி சேர்வதோடு, ஆயில் இந்தியா நிறுவனத்துடன் சுத்தீகரிக்கும் நிறுவனமான இந்தியன் ஆயில் (IOC) நிறுவனத்தையும் இணைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறதாம். இந்த நிறுவனங்களுடன், பாரத் பெட்ரோலியம் சேரும்போது, 3 பெரிய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வாய்ப்புள்ளதாம்.

Advertisement:
[X] Close