ஜியோ ப்ரைம் சலுகைகள் வெளியீடு!!

  shriram   | Last Modified : 01 Mar, 2017 02:56 pm
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச ஆஃபர்கள் இந்த மாத இறுதியில் முடிவடைவதால், அந்நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டங்களும், சலுகைகளும் இன்று வெளியிடப்பட்டன. தற்போதய ஜியோ வாடிக்கையாளர்கள் 99 ரூபாய் கொடுத்து ஒரு வருடத்திற்கு ப்ரைம் சலுகைகளை பெறலாம். இதில் ஆடியோ, வீடியோ, படங்கள் என பல்வேறு சேவைகளை இலவசமாக பெறலாம். ஆனால், இலவச கால்கள், எஸ்.எம்.எஸ், டேட்டா பெற, மாத கட்டணம் உண்டு. முன்பு அறிவித்தது போல், ப்ரைம் வாடிக்கையாளர்கள், 303 ரூபாய் கொடுத்து 28 நாட்களுக்கு இலவச கால், மெசேஜ் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி விகிதம் 28 ஜிபி இலவச டேட்டாவை 4ஜி வேகத்தில் பெறலாம். ஒரு நாளைக்கு 2ஜிபி விகிதம் 56 ஜிபி டேட்டா பெற 499 ரூபாய் கட்டணம் கொடுக்க வேண்டும். இதேபோல 999 ரூபாயில் 60 நாட்களுக்கு 60 ஜிபி, 1999 ரூபாயில் 90 நாட்களுக்கு 125 ஜிபி, 4999 ரூபாயில் 180 நாட்களுக்கு 350 ஜிபி, 9999 ரூபாயில் 360 ஆட்களுக்கு 750 ஜிபி திட்டங்களும் உண்டு. மேலே குறிப்பிட்ட 303, 499 மற்றும் 999 திட்டங்கள், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். ப்ரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த அனைத்து சலுகைகளிலும் டேட்டா அளவு கணிசமாக குறையும். மேலும், 28 நாட்களுக்கு, இலவச கால்கள், 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா தரும் குறைந்தபட்ச ப்ரீபெய்டு திட்டத்திற்கு 149 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ரைம் பெறாதவர்களுக்கு 1ஜிபி தான் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close