மதுரை - டெல்லி விமான சேவையை துவக்கியது இண்டிகோ

  mayuran   | Last Modified : 01 Mar, 2017 09:55 pm

இந்தியாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இண்டிகோ விமான சேவை, 126 விமானங்களுடன் 45 இடங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது. இந்நிலையில் கலாச்சார நகரமாக திகழும் மதுரையில் இருந்து டெல்லிக்கான சேவையினை இன்று முதல், இண்டிகோ விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் 37 வது உள்நாட்டு விமான சேவையினை ஆரம்பித்துள்ளதாக, இண்டிகோ நிறுவன இயக்குநர் ஆதித்யா கோஷ் தெரிவித்துள்ளார். அத்துடன் மதுரை - ஹைதராபாத் விமான சேவை வருகிற மார்ச் 26ந் தேதி முதல் இயங்க உள்ளது என்று அவர் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close