தற்கொலையை தடுக்க பேஸ்புக்கின் புதிய திட்டம்

Last Modified : 02 Mar, 2017 11:43 am

தங்களின் தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் வீடியோவாகவோ அல்லது பதிவுகளாகவோ வெளியிடும் பழக்கம் சமீப காலமாக இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 14 வயது சிறுமி ஒருவள் தன் தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்தது அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதையடுத்து தற்கொலை முயற்சி செய்பவர்களை தடுக்கும் விதமாக புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப் படுத்தி உள்ளது. லைவ் ஸ்ட்ரீமிங் வசதியுடன் இணைந்து வழங்கப் பட உள்ள இதில், யாரேனும் தற்கொலை முயற்சி சம்பந்தமாகவோ அல்லது மனஅழுத்தம் சம்பந்தமாகவோ வீடியோக்களை ஒளிபரப்பு செய்யும் போது, அதனை பார்ப்பவர்கள் ரிப்போர்ட் ஆப்ஷன் மூலம் பேஸ்புக்கிற்கு தகவல் அளிக்கலாம். இதனைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட நபர் குறித்த தகவல்களை அவரது நண்பர்களுக்கோ அல்லது ஹெல்ப் லைனுக்கோ பேஸ்புக் அளிக்கும். அதே நேரம் வீடியோவை ஒளிபரப்பு செய்பவருக்கும் பாப் - அப் மெசேஜ் மூலமாக உதவிகள் குறித்த தகவலை பேஸ்புக் அனுப்பும். இதன் மூலம் தற்கொலை எண்ணம் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து பயனாளர்களை மீட்க முடியும் என பேஸ்புக் நம்புகிறது. தற்போது லைவ் ஸ்ட்ரீமிங் வசதியுடன் மட்டும் வழங்கப் படும் இச்சேவை விரைவில் எழுத்துபூர்வமான பதிவுகளுக்கும் (Post) நீட்டிப்பு செய்யப் பட உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close