• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

"Splendor" - உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பைக்

Last Modified : 02 Mar, 2017 02:03 pm

இந்தியாவின் ஹீரோ நிறுவனமும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனமும் இணைந்து 1994-ஆம் ஆண்டு Splendor பைக்கை அறிமுகப் படுத்தின. இதன் மாடல், கையாள எளிமையாக இருப்பது மற்றும் அதிக மைலேஜ் ஆகிய அம்சங்களுக்காக அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி வாங்கப் பட்டது. மேலும் இதன் விலையும் பட்ஜெட்டிக்குள் அடங்கும் வகையில் இருந்தது மற்றொரு சிறப்பம்சமாகும். ஹீரோ ஹோண்டா நிறுவனம் பிரிந்த பின்னர் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்த பைக்கை உற்பத்தி செய்து வருகிறது. 1994-ம் ஆண்டு முதல் பல்வேறு மாறுதல்களை இந்த பைக் சந்தித்தாலும் அனைவரின் விருப்ப தேர்வாக இன்று வரை உள்ளது. இந்த நிதியாண்டில் உலகிலேயே அதிகம் விற்பனையான பைக் என்ற பெருமையை இந்த பைக் பெற்றுள்ளது. 3-வது காலாண்டில் மட்டும் 5,91,017 பைக்குகள் உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

Advertisement:
[X] Close