கூல் S1 மொபைல் போன் மே மாதம் முதல் இந்தியாவில்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான cool padன் cool s1 மொபைல் போன் வரும் மே மாதம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த மொபைல் போனை, பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கூட்டத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. மேலும், cool s1 மொபைலில் மியூசிக் மற்றும் கேம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கூட்டத்தில் cool s1 மொபைல் காட்சிப்படுத்தப்பட்ட போது, அதன் உயர் தரமான ஒலியமைப்பிற்காக Harman Kardon's tone tuning technology சான்றிதழ் வழங்கியுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனுக்கு அந்நிறுவனம் தரும் முதல் தரச் சான்றிதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது. 5.50-இன்ச் டச் ஸ்கீரின் டிஸ்பிளே, 2.35GHz quad-core Snapdragon 821 processor மற்றும் 4GB RAM ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 32GB மெமரியுடன் வரும் cool s1 மொபைல் போனின் முன் பக்க கேமரா 8MP ஆகவும், பின் பக்க கேமரா 16MP ஆகவும் இருக்கிறது. அத்துடன் ஆண்ட்ராய்ட் 6.0 வில் இயங்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.