உலகத்தில் செல்வாக்கு மிக்க பிராண்ட்கள் பட்டியலில் இணைந்த ஜெட் ஏர்வேஸ்

  gobinath   | Last Modified : 02 Mar, 2017 02:26 pm
பங்கு சந்தை அடிப்படையில், இந்தியாவிலேயே 2ஆவது மிகப் பெரிய விமான நிறுவனமாக தன்னை உயர்த்திக் கொண்ட ஜெட் ஏர்வேஸ், மற்றைய இந்திய நிறுவனங்கள் தொடாத உச்சத்தை எட்டியுள்ளது. 'Richtopia' என்ற முன்னணி டிஜிட்டல் தளம் , உலகத்தில் 200 செல்வாக்குமிக்க பிராண்ட்கள் பட்டியலில் 109ஆவது இடத்தை ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு வழங்கி அதற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், உலகத்தில் உள்ள விமான நிறுவனங்களில் 15 மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் நிறுவனங்களின் செல்வாக்கு, சமூக ஊடக தாக்கம், Klout மதிப்பெண்கள் மற்றும் பிற அளவுகள் அடிப்படையில் மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக 'Richtopia' அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெட் ஏர்வேஸ் தலைமை வர்த்தக அதிகாரி ஜெயராஜ் சண்முகம், உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் செல்வாக்கு மிக்க பிராண்டுகள் மத்தியில் ஜெட் ஏர்வேஸ் இடம் பிடித்தது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். பயணிகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள தங்கள் நிறுவனத்தின் படைப்பு மற்றும் சிந்தனைக்கு கிடைத்த வெற்றி இது எனவும் அவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close