SBI: குறைந்தபட்ச பணம் இல்லாவிட்டால் அபராதம்

  shriram   | Last Modified : 03 Mar, 2017 09:56 pm

தனது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணத்தை கணக்கில் வைத்துக்கொள்ளா விட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கவுள்ளதாக இந்திய ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இதன்படி பெருநகரங்களில் 5000, நகர்ப்புறங்களில் 3000, ஊராக பகுதிகளில் 2000 மற்றும் கிராமங்களில் 1000 ரூபாயும் குறைந்தபட்சமாக வைத்திருக்க வேண்டும். வரம்பை விட எவ்வளவு பணம் குறைகிறதோ அதற்கேற்றாற்போல அபராதம் விதிக்கப்படும். அதேபோல 3 முறைக்கு மேல் வங்கி கிளையில் பணம் எடுத்தால் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close