இணையம் வழியாக, மற்றவர்களிடமிருந்து தகவல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஈ-மெயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈ-மெயில் பயன்பாட்டாளர்கள் அதிகளவாக கூகுளின் G-Mail சேவையினையே பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில், இதுவரை 25 எம்பி அளவுடைய ஃபைல்களை மட்டும்தான் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், கூகுள் டிரைவில் சேமித்து அனுப்பலாம். இந்நிலையில், ஜிமெயிலில் இருந்து இனி 50 எம்பி அளவுடைய ஃபைல்களை அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.