நாற்றத்தால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

  shriram   | Last Modified : 06 Mar, 2017 01:17 pm

பெங்களூரில் இருந்து டெல்லி செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் திடீரென ஹைதராபாத்தில் தரையிறங்கியது. விமான கழிவறையில் இருந்து வந்த நாற்றமே இதற்கு காரணம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. "பெங்களூரில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய B-737-800 விமானம், கழிவறையில் இருந்து வந்த துர்நாற்றம் விமானியின் அரை வரை சென்றதால், ஹைதராபாத்தில் தரையிறங்கியுள்ளது," என அறிக்கை வெளியிட்டது. 184 பயணிகள், 2 விமானிகள், மற்றும் 4 பணியாட்கள் அந்த விமானத்தில் இருந்தனர். ஹைதராபாத் விமான நிலையத்தில் கழிவறை சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் விமானம் கிளம்பியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close