பேஸ்புக் மெசஞ்சரில் இனி 'dislike' பட்டன்

  gobinath   | Last Modified : 06 Mar, 2017 12:49 pm
பேஸ்புக்கில் நாம் போடும் பதிவுகளுக்கும், நாம் செய்யும் அரட்டைகளுக்கும் நமது நண்பர்கள் 6 விதமான எதிர்வினைகளை தெரிவிக்க முடியும். அதிலும், குறிப்பாக நாம் போடும் பதிவுகளுக்கும், அரட்டைகளுக்கும் 'like' போடும் நண்பர்களால் 'dislike' போட பட்டன் ஏதும் இல்லை. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட பேஸ்புக் நிறுவனம், மிக விரைவில் அதன் மெசஞ்சரில் அரட்டை அடிக்கும் போது, 'dislike' பட்டனையும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சேவையானது இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் அது கூறியுள்ளது. பேஸ்புக் பதிவுகளுக்கு 6 விதமான எதிர்வினைகள் தெரிவிக்கும் பட்டன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இதுவரை சுமார் 30 ஆயிரம் கோடி எதிர்வினைகள் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அதிலும், குறிப்பாக 'love' பட்டனை 179 கோடி மக்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close