போலியான தகவலை கட்டுப்படுத்த பேஸ்புக்கின் புதிய முயற்சி

Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது பேஸ்புக்கில் போலியான தகவல்கள் பல பரப்பப்பட்டன. இதையடுத்து போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க புதிய முயற்சி ஒன்றை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன் படி பேஸ்புக் பயனாளர்கள் ஏதேனும் பொய்யான தகவல் அடங்கிய பதிவுகள் குறித்து புகார் கொடுத்தால் அந்த பதிவு குறித்து பேஸ்புக் ஆய்வு நடத்தும். ஆய்வின் முடிவில் பொய்யான பதிவு என தெரிய வந்தால், அப்பதிவின் கீழ்ப்புறத்தில் DISPUTE எனும் டேக் இணைக்கப் படும். மேலும் இப்பதிவுகளை பயனாளர்கள் ஷேர் செய்யும் போது அவர்களுக்கு எச்சரிக்கை தகவலும் அனுப்பப்படும். இதன் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது சோதனை முயற்சியாக குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் அளிக்கப் பட்டுள்ள இவ்வசதி விரைவில் அனைவருக்கும் அளிக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close