சாம்சங்கின் புதிய Galaxy A5, Galaxy A7 (2017) மாடல்கள் அறிமுகம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அண்மையில் சாம்சங் நோட் 7 மாடல்கள் சார்ஜ் செய்யும் போது வெடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தும் சாம்சங் மீதான மக்களின் மோகம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு Galaxy A5, Galaxy A7 ஆகிய இரண்டு மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்தது. இந்த மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி வெளிவந்தது. தற்போது அனைவரும் 4G பயன்பாட்டிற்கு மாறிவருவதால், வாய்ஸ் கால்களை HD தெளிவில் வழங்கும் VoLTE அம்சத்தை கொண்டு Galaxy A5 (ரூ.28,990) (2017), Galaxy A7 (ரூ.33,490) (2017) ஆகிய மாடல்கள் தற்போது இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இரண்டு மாடல்களிலும், 4G VoLTE, 3GB RAM, 32 GB இன்டெர்னல் மெமரி மற்றும் 256 GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதி, 16 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க, பின்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. Galaxy A5 (2017) மாடலில் 5.20 இஞ்ச் டிஸ்ப்ளே, 3000mAh பேட்டரியும், Galaxy A7 (2017) மாடலில் 5.70 இஞ்ச் டிஸ்ப்ளே, 3600mAh பேட்டரியும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close