1 ஜிபியில் 25 மணி நேரம் Netflix வீடியோக்கள் பார்க்கலாம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆயிரக்கணக்கான உலக படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய இணையதள வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுள் ஒன்றான நெட்ப்ளிக்ஸ், இந்தியாவில் தனது வீடியோ சேவையை பலப்படுத்தி வருகிறது. இதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் சேவையும் பற்றி பேசியபோது, ஜியோ நிறுவனம் இலவச ஆஃபர்களை வழங்கியதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. "எங்கள் சேவையை துவங்கியபோது, மொபைலில் வீடியோவை காண 1.5 மெகாபிட்கள் இணைய வசதி தேவைப்பட்டது. அதன்பின், அதை 0.5 மெகாபிட்களாக குறைத்தோம். தற்போது 200 கிலோபிட் தரமான வீடியோக்கள் அளவுக்கு குறைத்து விட்டோம். இப்போது 1ஜிபி சேவையை வைத்து 25 மணி நேரம் விடியோக்கள் பார்க்கலாம். இதை இன்னும் 100 கிலோபிட்களாக குறைக்க முயற்சித்து வருகிறோம்," என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close