சுவிட்சர்லாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் நெஸ்லே நிறுவன தயாரிப்பான கிட் கட் (Kit Kat) இல் சில மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்த சாக்லேட்டில், 10 சதவீதம் குறைவான சர்க்கரையுடன் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் உடல்நலத்தை கருத்திற்கொண்டே இந்த மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதன் சுவையில் எந்தவித மாற்றமும் இருக்காது என உறுதியாக கூறியுள்ளனர். சர்க்கரைக்கு பதிலாக வேறு சில இயற்கையான உள்ளீடுகள் சேர்க்கப்படும் அதேவேளை, கலோரியின் அளவையும் மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.