ஸ்மார்ட்போன் நிறுவனத்தை தொடங்குகிறார் சல்மான்கான்

  mayuran   | Last Modified : 09 Mar, 2017 09:00 pm
பாலிவூட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் 'பீயிங் ஸ்மார்ட்' என்ற ஸ்மார்ட்போன் கம்பனி ஒன்றை நிறுவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக் குழுவில் சாம்சங் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருந்தவர்களை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 'பீயிங் ஸ்மார்ட்' நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் அனைத்தும் அவரின் குடும்பத்தினர் பெயரில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மொபைல் தயாரிப்புக்காக சீனாவில் தொழிற்சாலை ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'பீயிங் ஹியூமன்' என்ற ஆடை நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை சமூக சேவைக்கு சல்மான் பயன்படுத்துகிறார். இதையே 'பீயிங் ஸ்மார்ட்' நிறுவனமும் பின்பற்றும் என்று கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close