2% கட்டண முறையை திரும்ப பெற்றது Paytm

Last Modified : 10 Mar, 2017 11:42 am

கிரெடிட் கார்டு வாயிலான Paytm ரீசார்ஜ்களுக்கு 2% சேவை கட்டணம் வசூலிக்கப் படும் என Paytm நிறுவனம் புதன்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று இரவு திரும்ப பெற்றுள்ளது. பயனாளர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "2% கட்டணமுறையால் கிரெடிட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்யும் பல நேர்மையான வாடிக்கையாளர்கள் பாதிக்கப் படுவதை கவனத்தில் கொண்டோம். லட்சக்கணக்கான பயனாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 2% கட்டண முறையை திரும்ப பெறுகிறோம். ஆனால் கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் மோசடியை தடுக்க தகுந்த நடவடிக்கையை விரைவில் எடுப்போம்," என தெரிவிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close