ஏர் இந்தியா கூறிய பொய்: 3 வருடத்தில் 6 ஆயிரம் கோடி நட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த அக்டோபர் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதன் அறிக்கையில், 2015 - 16 நிதியாண்டில் 105 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாக தெரிவித்திருந்தது. இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கையில் தப்பிருப்பதாக தெரிவித்துள்ள கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG), 2015-16 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 321 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய பாராளுமன்றத்தில் CAG அளித்த அறிக்கையில் 2012 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 6,415 கோடி ரூபாய் இழப்பை ஏர் இந்தியா சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, வரவை விட அதிகளவில் செலவு செய்வதாலேயே மேற்படி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஆடிட்டர் அலுவலகத்தின் பொது இயக்குநர் வி.குரியன், டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகத்திற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், விடுப்பு எடுத்துக் கொள்ளும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது. இந்திய விமான நிலைய ஆணைக்குழுவின் நிலுவைத் தொகை. விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் தங்குவதற்கு 5 நட்சத்திர ஓட்டல்கள். இவை தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் பெருமளவில் நட்டம் அடைய காரணம் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இந்திய அரசால் அமைக்கப்பட்ட செலவுகளை கட்டுப்படுத்தும் நிபுணர் குழுவின் ஆலோசனைகளை ஏர் இந்தியா நிறுவனம் கேட்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், விமானிகள் மற்றும் விமான ஊழியர்களை டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்ததற்கான செலவு மட்டும் 119 கோடி ரூபாய் என அறிவிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close