4.8 கோடி ட்விட்டர் கணக்குகளை பாட்ஸ் தான் இயக்குகிறதாம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ட்விட்டரில் தானாக போஸ்ட்களை ட்வீட், ரீ- ட்வீட் மற்றும் லைக் செய்வதற்காக உருவாக்கப் பட்டவையே ட்விட்டர் பாட்ஸ் (ட்விட்டர் பாட்ஸ்). கணினி ப்ரோக்ராமை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த பாட்ஸ்கள் தான் தற்போது 4.8 கோடி ட்விட்டர் கணக்குகளை இயங்குவதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா மற்றும் இண்டியானா பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. நண்பர்கள், பின் தொடரும் நபர்கள், ட்வீட்களுக்கு இடையேயான கால இடைவெளி உள்ளிட்ட 1000 அம்சங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 9% முதல் 15% வரையிலான ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் பாட்ஸ் தான் இயக்குகிறது என்பது தெளிவாகி உள்ளது. நிறைய பாட்ஸ்கள் பயனுள்ள தகவல்களை பகிருவதாகவும், ஆனால் ஒரு சில பாட்ஸ்கள் போலியான அரசியல் விமர்சனங்கள், தீவிரவாத கொள்கைகள் போன்றவற்றை பரப்புவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close