விலையேறிய ராயல் என்பீல்டு!!!

Last Modified : 14 Mar, 2017 10:36 am
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களின் விலையை அவற்றின் முந்தைய விலையை விட 3000 முதல் 4000 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் AHO வசதி மற்றும் BS-IV மாசுகட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப் பட்ட என்ஜின்கள் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப் பட்டிருக்க வேண்டும் எனும் விதி கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இதையடுத்து ராயல் என்பீல்டு நிறுவனம் AHO வசதி மற்றும் BS-IV என்ஜின் கொண்ட வண்டிகளை தயாரித்து வருகிறது. சில டீலர்களிடமும் இவை விற்பனைக்கு வந்து விட்டன. என்ஜின் மாற்றம் காரணமாகவே இந்த விலையேற்றத்தை என்பீல்டு நிறுவனம் கொண்டு வந்துள்ளது. என்ஜினை தவிர்த்து இந்த வண்டிகளில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close