பேரம் பேசிய வெரிசோன்... முரண்டு பிடிக்கும் யாஹூ

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தொழில் போட்டியாளர்களால் ஓரங்கட்டப்பட்ட யாஹூ நிறுவனத்தை வெரிசோன் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அதன் பங்குதாரர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு சுமார் 32,000 கோடி ரூபாய்க்கு யாஹுவை வாங்க வெரிசோன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் யாஹூ இணையதளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடு போன விஷயம் வெளியானதை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் இறுதியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வெரிசோன் நிறுவனத்தார் ஒப்பந்த தொகையில் 6.12 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தால் யாஹுவை வாங்குவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு யாஹூ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற பல கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2.31 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய யாஹூ ஒப்புக் கொண்டுள்ளது. இறுதியாக தற்போது 30,000 கோடி ரூபாய்க்கு யாஹூ நிறுவனத்தை வெரிசோன் வாங்க உள்ளது. ஆனால் 6.12 ஆயிரம் கோடியில் இருந்து 2.31 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து கொள்ள வெரிசோன் எவ்வாறு சம்மதம் தெரிவித்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

Advertisement:
[X] Close