தெர்மல் கேமரா கொண்ட Cat S60 ஸ்மார்ட்போன்

Last Modified : 17 Mar, 2017 02:09 pm

அமெரிக்காவை சேர்ந்த கேட்டர்பில்லர் நிறுவனம் Cat S60 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த மொபைலின் விலை 64,999 ரூபாயாகும். இவ்வளவு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த மொபைலின் சிறப்பு அம்சமே, இதில் இருக்கும் FLIR Lepton thermal camera தான். இந்த கேமரா கொண்டு புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாது நம்மை சுற்றி இருக்கும் பொருட்களின் வெப்பநிலைகளை கண்டறிய முடியும். இருட்டிலும் கூட இந்த கேமராவை கொண்டு தெளிவாக காண முடியும். மின்னணு சாதனங்களின் வெப்பநிலை போன்றவற்றை துல்லியமாக இது காட்டும் திறன் கொண்டுள்ளது. இந்த கேமரா தவிர்த்து இதில் இருக்கும் மற்ற அம்சங்கள் முறையே, 4.7 இன்ச் தொடுதிரை, 3ஜிபி RAM, 13 MP ரியர் கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் நேனோ சிம், 4G LTE, 3800mAh இன்பில்ட் பேட்டரி போன்றவை உள்ளன. 6 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் உருவாக்கப் பட்ட இந்த மொபைலை 5 மீட்டர் ஆழத்தில் தண்ணீருக்குள் 1 மணி நேரம் வைத்தாலும் எதுவும் ஆகாது. மேலும் மைனஸ் 25 டிகிரி செல்சியஸில் இருந்து 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை இந்த மொபைல் தாங்க கூடியது. இதில் இருக்கும் அவசர கால பட்டண் மூலம் உதவி தேவைப்படும் சமயங்களில் நமக்கு வேண்டியவர்களுக்கு எளிதில் தகவல் அனுப்ப முடியும். இந்த போனை குறிப்பாக வெளியிலே கடினமான இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்காக வடிவமைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுமான பொறியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை குறிவைத்து இதை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close