• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்கிறது 'போயிங்' நிறுவனம்

  gobinath   | Last Modified : 18 Mar, 2017 10:55 am

விமானத் தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' வரும் மே மாதம், தனது ஊழியர்கள் சிலரை வெளியேற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம், வாஷிங்டனில் உள்ள தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு போயிங் சார்பாக அறிக்கை ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. அதில், வரும் மே மாதம் முதல், பணியாளர்கள் சிலர் கட்டாய வெளியேற்றத்திற்கு ஆளாகுவார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன், வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு, 60 நாள் நோட்டீஸ் முன்னதாகவே கொடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. தனது செலவீனத்தை குறைக்கும் நோக்குடனேயே, போயிங் தனது ஊழியர்களை வெளியேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில், இதில், முதன்மை நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் பொறியியல் ஊழியர்கள் முதலில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் மே மாதம் சுமார் 500 ஊழியர்களை வெளியேற்ற போயிங் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, போயிங் நிறுவனத்தின் தயாரிப்புகளான, 'போயிங் 777', 787 மற்றும் ட்ரீம்லைனர்ஸ் விமானங்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்ததே, ஊழியர்களின் கட்டாய வெளியேற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது . இந்த நிலையில், கடந்த மாதம் வரையில், போயிங் நிறுவனத்தின் பயணிகள் விமான அலகில் மொத்தமாக 148,000 ஊழியர்கள் வேலை பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களில் சிலர் தான் வரும் மே மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close